உ.பி., பாஜவில் புகைச்சல்: பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை?
உ.பி., பாஜவில் புகைச்சல்: பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை?
உ.பி., பாஜவில் புகைச்சல்: பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை?
ADDED : ஜூலை 17, 2024 05:52 PM

புதுடில்லி: உ.பி., பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று, மாநில பா.ஜ., தலைவர் பூபேந்திர சவுத்ரி பதவி விலக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக அம்மாநில தலைவர்கள் டில்லி வந்து மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 2027 ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராவது, அதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
சமீபத்தில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‛‛அரசை விட கட்சி பெரியது. கட்சியை விட யாரும் பெரியவர்கள் அல்ல '' என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். இதனையடுத்து அம்மாநில பாஜ.,வில் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதனை பா.ஜ.,மறுத்துள்ளது.
இந்நிலையில் தான், கேசவ் பிரசாத் மவுரியா, பாஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் யோகி ஆதித்யநாத் புகார் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அம்மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரியும் நட்டாவை சந்தித்து, உட்கட்சி பிரச்னை குறித்து விவாதித்ததாகவும் கூறப்பட்டது. பூபேந்திர சவுத்ரி பிரதமர் மோடியையும் சந்தித்தார். இருவரும் கட்சி பிரச்னை குறித்து விவாதித்தாகவும், தோல்விக்கு பொறுப்பு ஏற்று மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக மோடியிடம் பூபேந்திர சவுத்ரி கூறியதாக என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,மூத்த தலைவருமான அமித்ஷா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.