உ.பி. கவர்னருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
உ.பி. கவர்னருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
உ.பி. கவர்னருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
ADDED : ஜூலை 17, 2024 06:49 PM

லக்னோ: உ.பி., கவர்னரை சந்தித்து பேசினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி. பா.ஜ., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, வெளியிட்ட கருத்தால் மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி பதவி விலக போவதாக தகவல் வெளியானது. இதனால் அம்மாநில பா.ஜ.வில் கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக டில்லியில் பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது உ.பி. அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று (17.07.2024) முதல்வர் யோகி ஆதித்யநாத், திடீரென கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்து பேசினார்.