ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
UPDATED : ஜூலை 17, 2024 09:53 PM
ADDED : ஜூலை 17, 2024 07:12 PM

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வக்கீல் உட்பட3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக 11 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக பிரபல ரவுடியின் மனைவியும், அ.தி.மு.க,. திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழக துணை செயலாளரும் வக்கீலுமான மலர்கொடி மற்றும் ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
போலீசார் விசாரணையில் தி.மு.க, வக்கீல் அருளுடன் மலர்க்கொடி தொடர்ச்சியாக தொலை பேசியில் பேசியது தெரியவந்துள்ளது.மேலும் அவரது வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்த போலீசார் அதனடிப்படையில் மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 7 தினங்களாக ஸ்ரீனிவாசன், சுதீஷ் , நரேஷ் என்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துளளனர். இதனையடுத்து இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து உள்ளது.