/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடியில் வடமாநில ரயில்கள் நிறுத்த தென்மாவட்ட பயணியர் கோரிக்கை கும்மிடியில் வடமாநில ரயில்கள் நிறுத்த தென்மாவட்ட பயணியர் கோரிக்கை
கும்மிடியில் வடமாநில ரயில்கள் நிறுத்த தென்மாவட்ட பயணியர் கோரிக்கை
கும்மிடியில் வடமாநில ரயில்கள் நிறுத்த தென்மாவட்ட பயணியர் கோரிக்கை
கும்மிடியில் வடமாநில ரயில்கள் நிறுத்த தென்மாவட்ட பயணியர் கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2024 07:05 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய் கண்டிகை சிப்காட், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 450க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அனைத்து தொழிற்சாலைகளுக்கும் மைய பகுதியாக கும்மிடிப்பூண்டி உள்ளது. இந்த தொழிற்சாலைகளில், தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த, குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கு முன், கும்மிடிப்பூண்டியில் இருந்து எளிதாக கோயம்பேடு சென்று, அங்கிருந்து நேரடி பேருந்து பிடித்து சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர்.
தற்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதவரம் சென்று, அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்ல வேண்டும். பின், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்றாவதாக ஒரு பேருந்து பிடித்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், பணம் மற்றும் நேர விரயம் ஏற்படுவதுடன், தங்கள் உடைமைகள் மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்வது என்பது பெரும் சவாலாக உள்ளது என புலம்புகின்றனர்.
எனவே, தென்மாவட்ட தொழிலாளர்கள் நலன் கருதி, வடமாநிலத்தில் இருந்து, சென்னை வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக, மேற்கு வங்கத்தில் இருந்து இயக்கப்படும் ஹவுரா - -திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், புருலியா - -திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் அனுவ்ரத் எக்ஸ்பிரஸ், உத்தரபிரதேச மாநிலம் பனாரசில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மாவட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.