கர்நாடகா அரசு முடிவு: ஐ.டி., நிறுவனங்களுக்கு ஆந்திரா அழைப்பு
கர்நாடகா அரசு முடிவு: ஐ.டி., நிறுவனங்களுக்கு ஆந்திரா அழைப்பு
கர்நாடகா அரசு முடிவு: ஐ.டி., நிறுவனங்களுக்கு ஆந்திரா அழைப்பு
ADDED : ஜூலை 17, 2024 07:52 PM

பெங்களூரு : கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொழில் துறையினர் தங்கள் மாநிலத்தில் வருமாறு ஆந்திரா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது கர்நாடகா அரசின் முடிவுக்கு தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கர்நாடகாவின் முடிவால் பக்கத்து மாநிலமான ஆந்திர அரசு, நாஸ்காம் உள்ளிட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.