Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் : கிராம சபையில் பயனாளிகள் தேர்வு சரியா?

இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் : கிராம சபையில் பயனாளிகள் தேர்வு சரியா?

இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் : கிராம சபையில் பயனாளிகள் தேர்வு சரியா?

இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் : கிராம சபையில் பயனாளிகள் தேர்வு சரியா?

ADDED : ஆக 21, 2011 02:06 AM


Google News

ஈரோடு : தமிழக அரசின், இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டப் பயனாளிகளை, கிராம சபையின் மூலம் தேர்வு செய்தால், பல்வேறு பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது.



'வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல், தற்போதைய நிலவரப்படி இல்லை; மத்திய அரசு 2001ல் எடுத்த கணக்கின் படி தான் உள்ளது.

எனவே, இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில், ஊராட்சி கிராம சபை மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்' என, சட்ட சபையில் ஜெயலலிதா அறிவித்தார். கிராம சபைக் கூட்டங்களில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டால், பல்வேறு பிரச்னைகள் எழும் நிலை உள்ளது.

* கிராம சபைக்கு தலைமை வகிக்கும் பெரும்பாலான ஊராட்சி தலைவர், ஏதாவது ஒரு கட்சி சார்புடையவராகவும், ஜாதி சார்புடையவராகவும் இருந்தால், கட்சி சார்ந்தவருக்கோ அல்லது உறவினருக்கோ முன்னுரிமை அளிக்க வாய்ப்புள்ளது.

* ஒருவர் பயனாளியாக தேர்வு செய்யப்படும் போது, தேர்வு பெறாத மற்றொருவர், குறை கூறுவதுடன், தன்னையும் பயனாளியாக்க கிராம சபையில் பிரச்னை கிளப்ப வாய்ப்புள்ளது.

* கிராமத்திலுள்ள அனைவரும் நன்கறிந்த, பழகியவர்கள் என்பதால், தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளால், பிரச்னை செய்பவர்களிடம் கடுமையாக பேசி, கட்டுப்படுத்தவும் இயலாது.

* முக்கிய தினங்களில் நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தில், சொற்ப எண்ணிக்கையில் வருபவர்களை வைத்து, நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு, ஒவ்வொருவரது வீடு தேடி சென்று, கையெழுத்து வாங்கும் நிலை தான், பெரும்பாலான ஊராட்சிகளில் உள்ளது. இப்பிரச்னையை தவிர்க்க, பயனாளிகள் தேர்வுக்கு, குறிப்பிட்ட நிலையான தகுதிகள் நிர்ணயித்து, கால்நடை, வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய தேர்வுக் குழுவை, ஊராட்சி அல்லது யூனியன் வாரியாக அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us