/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூரில் தே.மு.தி.க., வேட்பாளர் பிரச்சாரம்ஓசூரில் தே.மு.தி.க., வேட்பாளர் பிரச்சாரம்
ஓசூரில் தே.மு.தி.க., வேட்பாளர் பிரச்சாரம்
ஓசூரில் தே.மு.தி.க., வேட்பாளர் பிரச்சாரம்
ஓசூரில் தே.மு.தி.க., வேட்பாளர் பிரச்சாரம்
ADDED : செப் 27, 2011 11:31 PM
ஓசூர்: ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர் சந்திரன்,
நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.
ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தே.மு.தி.க.., சார்பில் அக்கட்சி மாவட்ட
செயலாளர் சந்திரன் போட்டியிடுகிறார். தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட
கட்சிகளில் கவுன்சிலர் வேட்பாளர் தேர்வு, வேட்புமனுதாக்கல் மற்றும்
அதிருப்தி நிர்வாகிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் நிர்வாகிகள் மூழ்கி
கிடக்கின்றனர். இதனால், அக்கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை இன்னும் துவங்க
முடியாமல் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். தே.மு.தி.க., வில் நிர்வாகிகள்
அதிருப்தி, கோஷ்டி பூசல் எதுவும் இல்லாததால் மற்ற கட்சிகளை முந்திகொண்டு
வேட்பாளர் சந்திரன் முதல் ஆளாக தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். கட்சி
நிர்வாகிகள், தொண்டர்களுடன் 16, 17வது வார்டுகள் உள்ள மூக்கண்டப்பள்ளி,
மத்தம் அக்ரஹாரம் ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டினார்.
மேலும், அப்பகுதியில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்
ஒன்றிய செயலாளர் ராமசாமி ரெட்டி, நகர பொருளாளர் மணி ஆகியோரை ஆதரித்து
சந்திரன் பிரச்சாரம் செய்தார். பெண்கள் வேட்பாளர்களை ஆரத்தி எடுத்து
வரவேற்றனர். தே.மு.தி.க., வினர் கட்சி சின்னம் மற்றும் வேட்பாளர்கள் பெயர்
போட்ட துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்து ஆதரவு திரட்டினர்.


