/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பண்பொழி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-திமுக., செமபைட்பண்பொழி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-திமுக., செமபைட்
பண்பொழி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-திமுக., செமபைட்
பண்பொழி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-திமுக., செமபைட்
பண்பொழி டவுன் பஞ்.,தலைவர் பதவி அதிமுக.,-திமுக., செமபைட்
கடையநல்லூர் : பண்பொழி டவுன் பஞ்.,தேர்தலில் அதிமுக.,-திமுக., வேட்பாளர்களுக்கிடையே நேரடி போட்டி காணப்படுகிறது.
பண்பொழி டவுன் பஞ்.,சில் அதிமுக.,-திமுக., வேட்பாளர்களுக்கு மத்தியில் தற்போதைய தேர்தல் நிலையில் நேரடி போட்டி காணப்படுகிறது. இந்த டவுன் பஞ்.,சில் அதிமுக சார்பில் போட்டியிடும் சங்கரசுப்பிரமணியன் கூறியதாவது:- பண்பொழி டவுன் பஞ்.,தலைவராக கடந்த 1986-91ம் ஆண்டு இருந்தபோது அப்போது காணப்பட்ட ஜனத்தொகையைவிட தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது டவுன் பஞ்., பகுதியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் வகையிலும், தொலைநோக்கு சிந்தனையுடன் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் கிடைத்திடும் வகையில் திட்டம் வகுக்கப்படும். பண்பொழி, கரிசல்குடியிருப்பு, கந்தசாமிபுரம் உள்ளிட்ட டவுன் பஞ்., பகுதிகளில் முழுமையான சுகாதாரம் பராமரிக்கப்படும்.
பண்பொழி அனுமன் நதியில் படித்துறை, அனுமன்நதி பெரியகுளம் ஆகிய பகுதிகளிலும் படித்துறை அமைக்கப்படும். கந்தசாமிபுரம், கரிசல், திருமலைக்கோயில் அடிவாரம், பிள்ளையார் கோயில் பகுதி ஆகிய இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் நிறுவப்படும். பெரியபள்ளிவாசல் தெருவில் வாறுகால் மற்றும் ரோடு வசதி செய்து தரப்படும்.
இப்பகுதி மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு பண்பொழியை தலைமையிடமாக கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நான்கு ரதவீதிகளில் மெர்குரி விளக்குகள் அமைக்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்குகள் டவுன் பஞ்., பகுதிகளில் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பெரியகுளத்தில் விவசாய களம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பண்பொழி திமுக வேட்பாளர் ராஜராஜன் கூறியதாவது :- டவுன் பஞ்.,சில் திறமையான நிர்வாகம், வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் குறைகளை நாள்தோறும் வார்டு, வார்டாக நேரடியாக சென்று ஆய்வு செய்து களையப்படும். கடந்த திமுக ஆட்சியில் பண்பொழி டவுன் பஞ்., பகுதியில் சுமார் ரூ.1.5 கோடியில் திட்டப் பணிகள் நடந்துள்ளது. குடிநீர் நலனை கருத்தில் கொண்டு பண்பொழி, கரிசல், கந்தசாமிபுரம் ஆகிய பகுதிகளில் புதிதாக வாட்டர் டேங்குகள் அமைக்கப்படும். சீரான குடிநீர் வினியோகம், சிறப்பான சுகாதார வசதி உடனடியாக செய்துதரப்படும். எம்.பி., தொகுதி ஒதுக்கீட்டின்படி தங்கவேலு எம்.பி.யிடம் பண்பொழி டவுன் பஞ்.,சில் சத்தியவாணி நகர் பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் உணவு அருந்தும் கூடமும், கரிசல்குடியிருப்பில் ரூ.5 லட்சம் செலவில் உணவு அருந்தும் கூடமும், ஊ.ஆ தெருவில் சிமென்ட் தளம் ரூ.7 லட்சம் செலவில் அமைத்திடவும் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. அந்த நிதியினை பெற்று இதற்கான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு இருளில்லாத டவுன் பஞ்.,சாக உருவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


