Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தீப்பிடித்த கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது சீனா

தீப்பிடித்த கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது சீனா

தீப்பிடித்த கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது சீனா

தீப்பிடித்த கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது சீனா

UPDATED : ஜூன் 11, 2025 04:20 PMADDED : ஜூன் 11, 2025 03:20 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் தீப்பற்றிக் கொண்ட சரக்கு கப்பலில் இருந்து சீனாவை சேர்ந்தவர்களை மீட்ட இந்திய கடற்படைக்கு சீன தூதரகம் நன்றி தெரிவித்து உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7 ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் எம்வி வான் ஹை 503 என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் மும்பைக்கு சென்று கொண்டு இருந்தது. கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டு இருந்த போது இக்கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து கொச்சியில் உள்ள கடல் கண்காணிப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கப்பலில் 22 பேர் இருந்த நிலையில், அதில் 14 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். அவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். கப்பலில் இருந்தவர்களில் 4 பேரை காணவில்லை. மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதற்கு நன்றி தெரிவித்து இந்தியாவிற்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜூன் 9 ல் கேரளாவின் 44 கடல் மைல் தொலைவில் வெடிப்பு காரணமாக கப்பல் தீப்பிடித்தது. கப்பலில் இருந்த 22 பேரில் 15 பேர் சீனர்கள். 6 பேர் தைவானைச் சேர்ந்தவர்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படைக்கும், மும்பை கடலோர காவல்படைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடியவும் வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தைவானும் நன்றி


இந்தியாவுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை எடுத்த விரைவான நடவடிக்கைக்கு தைவான் அரசு நன்றி தெரிவிக்கிறது. காணாமல் போனவர்கள் பத்திரமாக திரும்பவும், காயமடைந்தவர்கள் குணமடையவும் வேண்டிக் கொள்கிறோம் எனத் தெரிவித்து உள்ளது.

40 சதவீதம்

இதனிடையே இந்த கப்பலில் ஏற்பட்ட தீயில் 40 சதவீதம் அணைக்கப்பட்டுவிட்டதாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தெரிவித்து உள்ளனர். இந்த கப்பலில் யாரும் இல்லை எனவும், தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையை நோக்கி மெதுவாக நகர்கிறது எனத் தெரிவித்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us