/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரி மக்களுக்கு "இன்டக்சன் ஸ்டவ்' உணவுத் துறை அமைச்சர் பரிந்துரைநீலகிரி மக்களுக்கு "இன்டக்சன் ஸ்டவ்' உணவுத் துறை அமைச்சர் பரிந்துரை
நீலகிரி மக்களுக்கு "இன்டக்சன் ஸ்டவ்' உணவுத் துறை அமைச்சர் பரிந்துரை
நீலகிரி மக்களுக்கு "இன்டக்சன் ஸ்டவ்' உணவுத் துறை அமைச்சர் பரிந்துரை
நீலகிரி மக்களுக்கு "இன்டக்சன் ஸ்டவ்' உணவுத் துறை அமைச்சர் பரிந்துரை
ADDED : ஆக 28, 2011 11:23 PM
ஊட்டி : ''நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசம் என்பதால், மின் விசிறிக்கு
பதிலாக, 'இன்டக்சன் ஸ்டவ்' வழங்க முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டுள் ளது,''
என, உணவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த
விழாவில், உணவுத் துறை அமைச்சர் புத்தி சந்திரன் பேசியதாவது: மாணவர்கள்
நலனின், முதல்வர் தனி அக்கறை கொண்டுள்ளார். சேலம் அன்னபூர்ணா மருத்துவக்
கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் செலுத்த வசதியில்லாத, நீலகிரி
மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவன் மணிகண்டனின் 6 வருட கல்வி மற்றும்
அனைத்து கட்டணத்தையும் அரசு ஏற்று கொண்டுள்ளது. நீலகிரி மாணவர்கள்,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ்., தேர்வுகளில் வெற்றி பெற ஏதுவாக, மனித நேய அறக்கட்டளை
பயிற்சி மையம், மாவட்டத்தில் துவங்கப்பட உள்ளது. இன்ட்கோ
தொழிற்சாலைகளுக்கு, அரசு 3 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. தற்போது
வட்டியுடன் கடன் தொகை 16 கோடியாக உயர்ந்துள்ளது; கடனை திரும்ப
செலுத்தினால், வட்டி ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஒரு கோடி
ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டுள்ள நிலையில், 2 கோடி ரூபாயும் விரைவில்
செலுத்தப்படும். செப்டம்பர் 15ம் தேதி முதல், இலவச மிக்சி, கிரைண்டர்
மற்றும் மின் விசிறிகள் வழங்கப்பட உள்ளன. நீலகிரி மாவட்டம் குளிர்பிரதேசம்
என்பதால், மின் விசிறிகளுக்கு பதிலாக, இன்டக்சன் ஸ்டவ் வழங்க, முதல்வரிடம்
பரிந்துரைத்துள்ளேன்; அவரும், பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு,
அமைச்சர் புத்திசந்திரன் கூறினார்.