/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தக்கை பூண்டு விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்தக்கை பூண்டு விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
தக்கை பூண்டு விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
தக்கை பூண்டு விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
தக்கை பூண்டு விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
ADDED : ஆக 02, 2011 11:35 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெல் விவசாயத்திற்கு அடிஉரமாக திகழும் தக்கை பூண்டு விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த ஒரு சில நாட்களாக சிறு மழை பெய்து வருகிறது. இந்த மழையை கொண்டு புரட்டாசியில் பயிர் செய்ய போகும் நெல் விவசாயத்திற்கு தேவைப்படும் மணிச்சத்து, தழைச்சத்துக்கான உரங்களுக்காக உர உப்புக்களை நம்பி இருக்காமல், தற்போதே அதற்கான தக்கை பூண்டு விவசாயத்திற்கு தயாராகி வருகின்றனர்விவசாயிகள். இதற்காக ஏக்கருக்கு 15 கிலோ வீதம் விதை ந டவு செய்து வருகின்றனர். இச் செடி 3 அடி உயரம் வளர்ந்தவுடன் அதை இயந்திர கலப்பையால் உழுது விடுவர். பின் அதன் மேல் தண்ணீர் பாய்ச்சி நெல் நடவு செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தற்போது அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.