இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி: பிரிட்டன் பிரதமருக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து
இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி: பிரிட்டன் பிரதமருக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து
இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி: பிரிட்டன் பிரதமருக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து
UPDATED : ஜூலை 06, 2024 05:10 PM
ADDED : ஜூலை 06, 2024 04:58 PM

புதுடில்லி: பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற கெர் ஸ்டாமருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கெர் ஸ்டாமரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் நினைவுகூர்ந்த அவர்கள் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டனர்.
இரு நாடுகளும் பலனடையும் இந்திய பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த விரைந்து பணியாற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. பிரிட்டனின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டிய இருவரும், இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பிரிட்டன் பிரதமர் ஆன கெர் ஸ்டாமருக்கு வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்தவும், இரு நாட்டு வளர்ச்சிக்காக பொருளாதார உறவை வலுப்படுத்தவும் முடிவு செய்தோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஈரான் அதிபருக்கு வாழ்த்து
ஈரான் அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள மசூத் பெஷ்கியானுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ ஈரான் அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். நமது மக்கள் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் நலனுக்காக நமது நீண்ட கால இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதையும் எதிர்நோக்கி உள்ளேன்.'' இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.