சித்தராமையாவின் அரசு ஊழல் நிறைந்தது: மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி காட்டம்
சித்தராமையாவின் அரசு ஊழல் நிறைந்தது: மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி காட்டம்
சித்தராமையாவின் அரசு ஊழல் நிறைந்தது: மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி காட்டம்
ADDED : ஜூலை 06, 2024 05:05 PM

ஹூப்பள்ளி: ''முதல்வர் சித்தராமையாவின் அரசு ஊழல் நிறைந்தது,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சித்து உள்ளார்.
ஹூப்பள்ளியில், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பா.ஜ., ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் வாங்கப்படுகிறது என, காங்கிரஸ் தலைவர்கள் பொய்யாக குற்றஞ்சாட்டினர். அதற்கு அவர்களிடம் ஆதாரம் இல்லை. இதனால் நாங்கள் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தோம்.
ஊழல் நிறைந்தது
ஒரு பக்கம் வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் ஊழல். இன்னொரு பக்கம் மூடா ஊழல். இந்த இரண்டிலும் முதல்வரின் பங்கு உள்ளது.வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழலை மூடி மறைக்க, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சராக இருந்த நாகேந்திராவை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. சித்தராமையா அரசு ஊழல் நிறைந்தது.
ஹிந்துக்களின் விரோதி
இந்த அரசில் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை. தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. லவ் ஜிகாத்தால் பாதிக்கப்படும் பெண்களைக் காப்பாற்ற, 'ஸ்ரீ ராமசேனை ஹெல்ப்லைன்' துவங்கியது. இந்த நம்பருக்கு சிலர் அழைப்பு விடுத்து மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த அரசு ஹிந்துக்களின் விரோதி. இவ்வாறு அவர் கூறினார்.