Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சி.பி.ஐ., கேள்விகளை சந்திக்க தயார்:ஜஸ்வந்த் சிங்

சி.பி.ஐ., கேள்விகளை சந்திக்க தயார்:ஜஸ்வந்த் சிங்

சி.பி.ஐ., கேள்விகளை சந்திக்க தயார்:ஜஸ்வந்த் சிங்

சி.பி.ஐ., கேள்விகளை சந்திக்க தயார்:ஜஸ்வந்த் சிங்

UPDATED : செப் 03, 2011 02:35 AMADDED : செப் 02, 2011 11:42 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:'எனது பதவிக் காலத்தில் '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை.

இது குறித்து, சி.பி.ஐ., மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்' என்று முன்னாள் நிதி அமைச்சரும், பா.ஜ., தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.'2ஜி' ஸ்பெக்ட்ரம் விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த சி.பி.ஐ., வழக்கறிஞர் வேணுகோபால், நீதிபதிகளிடம் விளக்குகையில், 'தே.ஜ.கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்த அருண் ÷ஷாரி, பிரமோத் மகாஜன் ஆகியோரது பதவிக் காலங்களில், ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் மீறப்பட்டதாகத் தெரிகிறது.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது, நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இந்நிலையில், நேற்று பார்லிமென்டுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய ஜஸ்வந்த் சிங் கூறியதாவது:நான் நிதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. யாரோ சிலர் என் மீது குறை கூறி, என்னை துயரத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவது போல் தெரிகிறது. சி.பி.ஐ., அதன் கடமையைச் செய்கிறது. என்னிடம் விசாரணை நடத்தினால், முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.



சி.பி.ஐ., தன் கேள்விகளால் என்னை வறுக்கட்டும்; கவலையில்லை. என் நினைவில் உள்ள விவரங்களை கூறுவேன்.இருப்பினும், என்னிடம் விசாரணை நடத்துவது குறித்து சி.பி.ஐ.,யிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. ஆனால், 'சக்தி படைத்தவர்களிடம் அதிகாரம் செல்லுபடியாகாது' என்று ராமர் கதையான, 'ராமச்சந்திர மானஸ்' கவிதை உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மற்றும் தயாநிதி விஷயத்தில் சி.பி.ஐ., செயல்பாடு இதை நினைவுபடுத்துகிறது.இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us