ADDED : ஆக 13, 2011 04:38 AM
சிவகங்கை : சிவகங்கையில் டூவீலர் பெட்டியை உடைத்து அதில் இருந்த 33 ஆயிரம் ரூபாய் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை அருகேயுள்ள அழகு மெய்ஞானபுரத்தை சேர்ந்தவர் முத்து(46).
வங்கியில் 33 ஆயிரம் ரூபாயை எடுத்து, டூவீலர் பெட்டியில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு, காந்திவீதியில் பலசரக்கு பொருட்கள் வாங்குவதற்காக நின்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், டூவீலர் பெட்டியை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.