ஜம்முவில் 40 பாக்., பயங்கரவாதிகள் பதுங்கல்: ராணுவம் தகவல்
ஜம்முவில் 40 பாக்., பயங்கரவாதிகள் பதுங்கல்: ராணுவம் தகவல்
ஜம்முவில் 40 பாக்., பயங்கரவாதிகள் பதுங்கல்: ராணுவம் தகவல்
ADDED : ஜூலை 22, 2024 09:56 PM

ஜம்மு: காஷ்மீரின் ஜம்மு மலைப்பகுதியில் 40 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுத்தும் , பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையை, பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ராணுவ வட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில், ஜம்முவின் மலைப்பகுதியில் 40 முதல் 50 பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்களை நம் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு உடலில் குண்டு குண்டு துளைக்காத நவீன கவச உடைகள், தானியங்கி ஆயுதங்களுடன் கடும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.