ADDED : ஜூலை 12, 2011 12:01 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு ஜீவா நகரை சேர்ந்த மாரியப்பன், மாணிக்கம் ஆகியோரது வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது.
இவர்கள் வீட்டில் மின் கம்பிகசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், இருவரது வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலானது. தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்தது. சம்பவம் குறித்து தலைஞாயிறு போலீஸார் விசாரிக்கின்றனர். வருவாய் ஆய்வாளர் வைரக்கண்ணு சம்பவ இடத்து சென்று விசாரணை நடத்தினார். எம்.எல்.ஏ., காமராஜ், ஒன்றிய செயலாளர் பாலசுப்பரமணியன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். எம்.எல்.ஏ., காமராஜ் தனது சொந்த பணத்தில் 4,000 ரூபாயும், அரசின் உதவித் தொகை பத்தாயிரமும் என மொத்தம் 14 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.