ADDED : ஜூலை 13, 2011 12:44 AM
புதுடில்லி:மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த குருதாஸ் காமத், உள்துறை இணை அமைச்சராக இருந்தார்.
நேற்று காலை அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியலில், அவருக்கு உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து, குடிநீர் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பதவிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், காமத் அதிருப்தி அடைந்து மாலையில் நடந்த பதவியேற்பு விழாவை, புறக்கணித்தார். பதவியேற்பு விழா முடிந்தபின், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.