Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான பாலங்கள்

தென்காசியில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான பாலங்கள்

தென்காசியில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான பாலங்கள்

தென்காசியில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான பாலங்கள்

ADDED : செப் 19, 2011 11:55 PM


Google News

தென்காசி : தென்காசியில் தடுப்பு சுவர் இல்லாமல் இருக்கும் இரண்டு பாலங்கள் விபத்தை ஏற்படுத்த காத்திருப்பதால் உடனடியாக தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி-செங்கோட்டை ரோட்டில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகில் சீவலப்பேரிகுளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் மீது சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரளாவிற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இது திகழ்வதால் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.



இப்பாலத்தின் மீது ரோட்டின் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. இதில் ஒரு தடுப்பு சுவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன் வாகனம் ஒன்று மோதி சுவர் உடைந்தது. தற்போது தடுப்பு சுவர் இல்லாமல் பாலம் இருக்கிறது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கவனம் சிறிது குறைந்தாலும் பாலத்தில் இருந்து தவறி கால்வாய்க்குள் விழுந்து விபத்தை சந்திக்க நேரிடும் ஆபத்து உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இதே போன்று சீவலப்பேரிகுளத்தின் அருகே உள்ள மற்றொரு பாலத்தின் தடுப்பு சுவரும் வாகனம் மோதியதில் உடைந்து விட்டது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இந்த பாலங்களை சீரமைத்து தடுப்பு சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us