/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மார்க்கெட் கட்டுமானப் பணி : நந்தா சரவணன் ஆய்வுமார்க்கெட் கட்டுமானப் பணி : நந்தா சரவணன் ஆய்வு
மார்க்கெட் கட்டுமானப் பணி : நந்தா சரவணன் ஆய்வு
மார்க்கெட் கட்டுமானப் பணி : நந்தா சரவணன் ஆய்வு
மார்க்கெட் கட்டுமானப் பணி : நந்தா சரவணன் ஆய்வு
ADDED : ஆக 18, 2011 04:34 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை மார்க்கெட் கட்டுமானப் பணிகளை நந்தா சரவணன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்தியால்பேட்டையில் பழுதடைந்த பழமையான கட்டடத்தில் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டை முற்றிலுமாக இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு நந்தா சரவணன் எம்.எல்.ஏ., முயற்சி எடுத்தார்.
இதையடுத்து, மார்க்கெட்டுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. கட்டுமானப் பணிகளை நந்தா சரவணன் எம்.எல்.ஏ., நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உள்ளாட்சித் துறை இயக்குனர் பாலசுப்ரமணியன், நகராட்சி ஆணையர் அழகிரி, உதவிப் பொறியாளர் மலைவாசன், இளநிலைப் பொறியாளர் பிரபாகரன் உடனிருந்தனர். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை நந்தா சரவணன் கேட்டுக் கொண்டார். மேலும், வியாபாரிகளின் வசதிக்கேற்ப சில மாற்றங்களை செய்து தருமாறும் கேட்டுக் கொண்டார்.