வேலைவாய்ப்பு பெருகி வருகிறது: பொருளாதார அறிக்கையில் நிதி அமைச்சர் தகவல்
வேலைவாய்ப்பு பெருகி வருகிறது: பொருளாதார அறிக்கையில் நிதி அமைச்சர் தகவல்
வேலைவாய்ப்பு பெருகி வருகிறது: பொருளாதார அறிக்கையில் நிதி அமைச்சர் தகவல்
ADDED : ஜூலை 22, 2024 12:57 PM

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (ஜூலை 22) லோக்சபாவில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பார்லிமென்டில் மத்திய பட்ஜெட்டை நாளை (ஜூலை 23) தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அப்போது, கடந்த பட்ஜெட்டின் நிதி ஒதுக்கீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்றும், அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலவரம் குறித்தும் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.
476 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில், 'நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது; தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன; நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன' உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.