/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகையில் 2வது நாளாக தொடர் மழை குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சிபுதுகையில் 2வது நாளாக தொடர் மழை குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
புதுகையில் 2வது நாளாக தொடர் மழை குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
புதுகையில் 2வது நாளாக தொடர் மழை குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
புதுகையில் 2வது நாளாக தொடர் மழை குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 12, 2011 12:08 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பலத்த மழை
பெய்ததால், வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது.
புதுக்கோட்டை
மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், கடந்த
சில நாட்களாக அவ்வப்போது தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது. நேற்று
முன்தினம் இரவு எட்டு மணிக்கு துவங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.
இரண்டாவது நாளாக நேற்றும் மழை பெய்தது. இடி, மின்னலுடன் இரண்டுமணி நேரம்வரை
இடைவிடாது பெய்த அடைமழையால் ரோடுகள், வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து
ஓடியது. புதுக்கோட்டை நகரப்பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக
பெய்த மழையால் பல மாதங்களாக நிலவிவந்த வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை
நிலவியது. குறுவை சாகுபடிக்காக மழையை எதிர்பார்த்து காத்திருந்த
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மத்தியில் இரண்டு நாள் பெய்த மழை பெரும்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.