Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தோப்பூரில் ரூ.125 கோடி செலவில் "மல்டி ஸ்பெஷாலிட்டி' ஆஸ்பத்திரி : கிராமப்புற ஏழைகளுக்கு நவீன சிகிச்சை

தோப்பூரில் ரூ.125 கோடி செலவில் "மல்டி ஸ்பெஷாலிட்டி' ஆஸ்பத்திரி : கிராமப்புற ஏழைகளுக்கு நவீன சிகிச்சை

தோப்பூரில் ரூ.125 கோடி செலவில் "மல்டி ஸ்பெஷாலிட்டி' ஆஸ்பத்திரி : கிராமப்புற ஏழைகளுக்கு நவீன சிகிச்சை

தோப்பூரில் ரூ.125 கோடி செலவில் "மல்டி ஸ்பெஷாலிட்டி' ஆஸ்பத்திரி : கிராமப்புற ஏழைகளுக்கு நவீன சிகிச்சை

ADDED : ஆக 25, 2011 11:41 PM


Google News

விருதுநகர் : மதுரை அருகே தோப்பூரில் ரூ.125 கோடி செலவில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி பணிகள் விரைவில் துவக்க உள்ளதாக மத்திய பொது சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே தோப்பூர் பகுதியில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி துவக்குவது குறித்து லோக்சபாவில் மாணிக்க தாகூர் எம்.பி., கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளதாவது: தோப்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி பணிகளுக்கு என மத்திய அரசு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான டெண்டர் விடும் நிலையில் உள்ளதால் விரைவில் பணிகள் துவக்கப்படும் என தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிகிச்சைப்பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப்பிரிவு, நவீன பிளாஸ்டிக் சர்ஜரி, புற்று நோய் பிரிவு, கதிரியக்க பிரிவு என அனைத்து உயர்தர சிகிச்சைகளும் ஒரே இடத்தில் துவக்கப்படும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் தலைமை டாக்டர், இரண்டு அறுவை சிகிச்சை டாக்டர், மயக்க மருந்து டாக்டர், பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். டாக்டர், செவிலியர்,தொழில் நுட்பவியலர்,சுகாதார பணியாளர் என ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கும்.ஏழை கிராமப்புற மக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து வகையான உயர்தர நவீன சிகிச்சைகள் கிடைக்கும் '', என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us