/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு நடுநிலைப் பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்அரசு நடுநிலைப் பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்
அரசு நடுநிலைப் பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்
அரசு நடுநிலைப் பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்
அரசு நடுநிலைப் பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்
ADDED : ஆக 29, 2011 10:55 PM
புதுச்சேரி : அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் இருநாள் சாரணர் பயிற்சி முகாம் நடந்தது.
முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி யில், சாரண சாரணியர் இயக்கம் மூலம் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
ஆசிரியை சியாமளா தேவி வரவேற்றார். சாரண அமைப்பு ஆணையர் கிருபாகரன் துவக்கி வைத்தார். சத்ரபதி சாரணர் இயக்கத்தின் முதல் நாள் பயிற்சி முகாமில் சாரணர்கள் வனத்துறைக்கு சென்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். சாரண ஆசிரியர் அரவிந்தர்ராஜா, காடுகளின் பயன்கள், வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார். இரண்டாவது நாளில், சர்வசமய வழிபாடு நடைபெற்றது. 'பூச்சிக்கடிக்கு முதலுதவி' என்ற தலைப்பில் பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி சாரண ஆசிரியர் புரு÷ஷாத்தமன் விளக்கம் அளித்தார்.நிறைவு விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்புராயன் சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியை பிரேமவிலாசினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச் சியில் ஆசிரியர்கள் சரவணகுமார், மாலதி, உதயகுமாரி வாழ்த்தி பேசினர்.