நீட் தேர்வை அரசியலாக்க விரும்பவில்லை: மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும்: தர்மேந்திர பிரதான்
நீட் தேர்வை அரசியலாக்க விரும்பவில்லை: மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும்: தர்மேந்திர பிரதான்
நீட் தேர்வை அரசியலாக்க விரும்பவில்லை: மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும்: தர்மேந்திர பிரதான்
UPDATED : ஜூன் 20, 2024 08:52 PM
ADDED : ஜூன் 20, 2024 07:42 PM

புதுடில்லி: நீட் தேர்வை அரசியலாக்க நான் விரும்பவில்லை . அதே நேரத்தில் யு.ஜி.சி. ‛நெட்', தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
யு.ஜிசி., நெட், மற்றும் ‛நீட்' ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக நாடு முழுவதிலும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
நாட்டின் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்க, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை சார்பில், யு.ஜி.சி., நெட் தேர்வு நாடு முழுதும் கடந்த 18-ம் தேதி நடந்தது. இத்தேர்வை, ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இந்நிலையில், யு.ஜி.சி., நெட் தேர்வில், முறைகேடு நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ‛நெட் 'தேர்வை ரத்து செய்த மத்திய கல்வி அமைச்சகம் வேறொரு நாளில் புதிய தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்தது.
‛‛நீட்'' தேர்விலும் பல்வேறு மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது,
நீ்ட் தேர்வில் ஏதோ ஒரு பகுதியில் நடந்த முறைகேடு காரணமாக நேர்மையாக
தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது. ‛நெட்' தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு மாணவர்களின் நலனை என்றும் பாதுகாக்கும். தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை.
இது தொடர்பாக விசாரிக்க கல்வி அமைச்சகம் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.
தேசிய தேர்வு முகமை நடைமுறைகளை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. உயர்மட்டக்குழு அளி்க்கும் பரிந்துரைக்கு பிறகு தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும்.வரும் காலங்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறாமல் தேசிய தேர்வு முகமையின் தரத்தினை மேம்படுத்தி தேர்வு நடத்திட உறுதி செய்யப்படும்.
நீட் தேர்வில் அரசியலில் செய்யாதீர்கள். நீட் தேர்வை அரசியலாக்க நானும் விரும்பவில்லை. முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.