மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
UPDATED : ஜூன் 20, 2024 08:31 PM
ADDED : ஜூன் 20, 2024 08:04 PM

புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி கோர்ட் ஜாமின் வழங்கியது.
மதுபான கொள்கையில் பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 2ல் மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜாமின் கோரி டில்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீது ஏற்கனவே இரு தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று (20.06.2024) ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் அவர் நாளை (21-ம் தேதி) திஹார் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் பிணை தொகை செலுத்திய நிலையில் கெஜ்ரிவாலை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க நீதீபதி உத்தரவிட்டார்.