/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து மனு: ஐகோர்ட் கிளை டிஸ்மிஸ் : ஆக்கிரமிப்பு அகற்றம்மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து மனு: ஐகோர்ட் கிளை டிஸ்மிஸ் : ஆக்கிரமிப்பு அகற்றம்
மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து மனு: ஐகோர்ட் கிளை டிஸ்மிஸ் : ஆக்கிரமிப்பு அகற்றம்
மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து மனு: ஐகோர்ட் கிளை டிஸ்மிஸ் : ஆக்கிரமிப்பு அகற்றம்
மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து மனு: ஐகோர்ட் கிளை டிஸ்மிஸ் : ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : செப் 19, 2011 12:54 AM
மதுரை : மதுரை பைபாஸ் ரோடு வானமாமலைநகரில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த மாநகராட்சி நோட்டீசை ரத்து செய்ய கோரிய மனுவை, ஐகோர்ட் கிளை டிஸ்மிஸ் செய்தது.
வானமாலைநகரை சேர்ந்த வானமாமலை தாக்கல் செய்த ரிட் மனுவில், ''முதல் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி, அதை அகற்ற மாநகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு கமிஷனருக்கு அதிகாரம் இல்லை. நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்,'' என கோரினார். மனு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி வக்கீல் எம்.ரவிசங்கர், ''மாநகராட்சி எல்லை பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார். அதை ஏற்று மனுவை டிஸ்மிஸ் செய்த நீதிபதிகள், மனுதாரர் தேவைப்பட்டால் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம், என்றனர்.