/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தண்ணீருக்காக வெளியேறும் விலங்குகளால் விவசாயிகள் பாதிப்புதண்ணீருக்காக வெளியேறும் விலங்குகளால் விவசாயிகள் பாதிப்பு
தண்ணீருக்காக வெளியேறும் விலங்குகளால் விவசாயிகள் பாதிப்பு
தண்ணீருக்காக வெளியேறும் விலங்குகளால் விவசாயிகள் பாதிப்பு
தண்ணீருக்காக வெளியேறும் விலங்குகளால் விவசாயிகள் பாதிப்பு
ADDED : செப் 23, 2011 11:19 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் இருந்து வரும்
விலங்குகள், தண்ணீருக்காக விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவதால்
விவசாயிகள் பாதிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை
பகுதியில் வாழும் அரிய வகை சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக வனத்துறை
அறிவித்து பாதுகாத்து வருகின்றனர். இங்கு மான்கள், யானைகள், காட்டு
பன்றிகள், மாடுகள், சிறுத்தை, புலி போன்ற உயிரினங்கள் உள்ளன.
இப்பகுதியில் சரிவர மழை பெய்யாதாதல் வன விலங்குகள் தண்ணீருக்காக அடிக்கடி
காடுகளை விட்டு வெளியேறி, விளை நிலங்களில் புகுந்து சேதத்தை விளைவித்து
வருகின்றன. கடந்த வாரம் செண்பக தோப்பு பகுதிகளில் யானைகள் தண்ணீருக்காக
வனப்பகுதியை விட்டு வெளியேறி மாந்தோப்புகளில் புகுந்து சேதத்தை
விளைவித்தது. இதே போல் பிள்ளையார்நத்தம், குன்னூர், மேல தொட்டியப்பட்டி,
பகுதி விளைநிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இதை தடுக்க
வனத்துறை சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து
தொட்டிகளில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.
விவசாயி ராமகிருஷ்ணன் தெரிவித்தாவது: கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்ய
வில்லை. தண்ணீருக்காக யானை, மான்கள் அடிக்கடி வனப்பகுதிகளிலிருந்து
வெளியேறி செண்பகதோப்பு, பிள்ளையார்நத்தம் பகுதி
விளைநிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க
வனப்பகுதியில் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து, வனவிலங்குகள் பயன்பெற
நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.