/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆண்டிபட்டி, போடியில் பைபாஸ் ரோடு திட்டம் தாமதம்ஆண்டிபட்டி, போடியில் பைபாஸ் ரோடு திட்டம் தாமதம்
ஆண்டிபட்டி, போடியில் பைபாஸ் ரோடு திட்டம் தாமதம்
ஆண்டிபட்டி, போடியில் பைபாஸ் ரோடு திட்டம் தாமதம்
ஆண்டிபட்டி, போடியில் பைபாஸ் ரோடு திட்டம் தாமதம்
ADDED : செப் 01, 2011 09:09 PM
தேனி : ஆண்டிபட்டி, போடியில் பைபாஸ் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆண்டிபட்டியில் டி.சுப்புலாபுரம் விலக்கில் இருந்து எஸ்.எஸ்., புரம் வரையிலும், போடியில் அணைக்கரைப்பட்டி பிரிவில் இருந்து சி.பி.ஏ., கல்லூரி அருகே கூவலிங்க ஆற்றுப்பாலம் வரையிலும் பைபாஸ் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், நிலம் கையகப்படுத்த நிதி ஆதாரத்திற்கான ஒதுக்கீட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இத்திட்டத்தை இரண்டு ஆண்டாக கிடப்பில் போட்டுள்ளது. ஆண்டிபட்டியிலும், போடியிலும் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.