உ.பி. முதல்வர் மாயாவதி பாதுகாப்புக்கு ரூ. 26 கோடி செலவு
உ.பி. முதல்வர் மாயாவதி பாதுகாப்புக்கு ரூ. 26 கோடி செலவு
உ.பி. முதல்வர் மாயாவதி பாதுகாப்புக்கு ரூ. 26 கோடி செலவு
ADDED : ஆக 10, 2011 07:29 AM
லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ரூ.26 கோடியும், அவரது இரண்டு சொகுசு பங்களாவின் பராமரிப்பிற்கு ரூ.20 கோடியும் என 46 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
உத்தரபிரதேச மாநில பட்ஜெட் கூட்டம் லக்னோவில் நடந்தது. இதில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பின்னர் துணை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதற்கு பதில் அளித்து நடந்த விவாதத்தில் ,முதல்வர் மாயாவதியின் பாதுகாப்பிற்காக குண்டுதுளைக்காத மூன்று கார்கள், மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களின் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக மொத்தம் ரூ. 26 கோடியும், லக்னோவில் உள்ள மாயாவதியின் மாயா-கன்ஷிராம் நகர் எக்கோ பார்க் உள்ளிட்ட இரு சொகுபங்களாவை பராமரிப்பதற்காக ரூ.20 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவற்றை தவிர அம்பேத்கர்- கன்ஷிராம் நினைவு பூங்கா பராமரிப்பிற்காக கூடுதலாக ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


