Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பராமரிப்பின்றி சீரழிந்து வரும் குற்றாலம் ஐந்தருவி பூங்கா

பராமரிப்பின்றி சீரழிந்து வரும் குற்றாலம் ஐந்தருவி பூங்கா

பராமரிப்பின்றி சீரழிந்து வரும் குற்றாலம் ஐந்தருவி பூங்கா

பராமரிப்பின்றி சீரழிந்து வரும் குற்றாலம் ஐந்தருவி பூங்கா

ADDED : செப் 13, 2011 12:16 AM


Google News

குற்றாலம் : பராமரிப்பின்றி சீரழிந்து வரும் ஐந்தருவி பூங்காவை பராமரிப்பு பணி செய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் உச்சகட்டத்தை அடைந்திருக்கும். சீசனை அனுபவிக்கவும், குற்றால அருவிகளில் குளித்து மகிழவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவர். அதுமட்டுமில்லாமல் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். மேலும் டிசம்பர் மாதம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வரும் கூட்டமும் அதிகரித்து காணப்படும்.



குற்றாலம் ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி சுற்றுலாத்துறை மூலமும், டவுன் பஞ்., நிர்வாகம் மூலமும் பல்வேறு கலை அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா மற்றும் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டவுன் பஞ்., நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அதிக வருமானம் வருகிறது.



இந்நிலையில் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள பூங்கா சரியான பராமரிப்பின்றியும், மின்விளக்கு வசதியின்றியும் உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் வருவதில்லை. இதனால் இப்பூங்கா 'குடிமகன்'களின் கூடாரமாக விளங்கி வருகிறது. எனவே ஐந்தருவி பூங்காவை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us