Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அ.தி.மு.க.,வினர் விருப்பமனு தாக்கல்

அ.தி.மு.க.,வினர் விருப்பமனு தாக்கல்

அ.தி.மு.க.,வினர் விருப்பமனு தாக்கல்

அ.தி.மு.க.,வினர் விருப்பமனு தாக்கல்

ADDED : செப் 09, 2011 02:01 AM


Google News
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினர், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலத்திடம், 7வது நாளாக நேற்றும் விருப்ப மனுத்தாக்கல் செய்தனர்.

அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட, அ.தி.மு.க., மீனவர் அணி செயலாளர் நாகராஜன் மனைவி சித்ரா விருப்ப மனு தாக்கல் செய்தார். மேலும் சங்கீதா ராமச்சந்திரன், கனிமொழி தமிழரசி, ஜீவா அரங்கநாதன், சீதா செந்தில்குமார், வைதேகி சசிக்குமார் உள்ளிட்டோரும், அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தனர். அரியலூர் நகராட்சி 2 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வெள்ளையம்மாள், 5 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட கண்ணன், 6 வது வார்டில் போட்டியிட ஆனந்தி சரவணன், 7 வது வார்டில் போட்டியிட செல்வம், தேவதாஸ், 8 வது வார்டில் போட்டியிட ரவிச்சந்திரன், 14 வது வார்டில் போட்டியிட மனோன்மணி வெங்கடாஜலபதி, சண்முகம், 17 வது வார்டில் சுகுமார் உள்ளிட்டோரும் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us