ADDED : ஆக 29, 2011 11:02 PM
பாகூர் : சேலியமேட்டில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, உறியடி உற்சவம் நடந்தது.
பாகூர் அடுத்த சேலியமேடு கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதனையொட்டி உறியடி, சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம் நம்மாழ்வார் சபை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.