இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்: ராகுல், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்பு
இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்: ராகுல், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்பு
இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்: ராகுல், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்பு
ADDED : ஜூன் 01, 2024 03:50 PM

புதுடில்லி: இண்டியா கூட்டணி'' கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று([ஜூன் 01) டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட லோக்சபா தேர்தலில், இதுவரை ஆறு கட்டம் முடிந்து விட்டது. இன்று (ஜூன் 01) ஏழாவது கட்ட தேர்தலும், 4ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், இன்று (ஜூன் 1) கூடி ஆலோசனை நடத்தினர்.
டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், சரத்பவார், சீதாராம் யெச்சூரி, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி டி.ஆர்.பாலு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.