Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

ADDED : ஆக 21, 2011 11:37 PM


Google News
திருப்பூர் : ஊத்துக்குளி அருகே ஏற்பட்ட விபத்தில் வங்கி அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர்.

ஈரோட்டில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிளைகளில், கணேசன் மகன் கணேஷ் ராமநாதன் (33); எழில் கண்ணன் புக்ராஜ் வர்மா ஆகியோர் மேலாளர்களாகவும், ராஜ்பாண்டியன் விற்பனை அதிகாரியாகவும் இருந்தனர். கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, 19ம் தேதி பிற்பகல் 2.00 மணியளவில், ஈரோடு - கோவை என்.எச்., ரோட்டில், 'ஸ்கோடோ ஆக்டோவா' காரில் (டி.என்., 57 வி 2004) வந்தனர். காரை, ராஜ்பாண்டியன் ஓட்டியுள்ளார்; செங்கப்பள்ளி பகுதியில் தாபா ஓட்டல் அருகில் கார் வந்த போது, குறுக்கே வந்த லாரி (என்.எல்., 09 ஜி 0621) மீது, கார் வேகமாக மோதியது; காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரில் பயணித்த கணேஷ் ராமநாதன், எழில் கண்ணன் இருவரும் உயிரிழந்தனர்; காயமடைந்த மற்ற இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். லாரியை ஊத்துக்குளி போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us