ADDED : ஆக 12, 2011 11:39 PM
குன்னூர் : நீலகிரி மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க செய்தி தொடர்பாளர் அந்தோணி ரவி வெளியிட்டுள்ள அறிக்கை; கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க குன்னூர் வட்டார பொறுப்பாளர்கள் தேர்தல் நாளை மதியம் 3.00 மணிக்கு குன்னூர் புனித அந்தோணியார் தேவாலய வளாகத்தில் நடக்கவுள்ளது.
மறைமாவட்ட அரசியல் பணிக்குழு இயக்குனர் அலெக்ஸ் முன்னிலையில் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் தலைமையில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. குன்னூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிளை பொறுப்பாளர்களும் பங்கெடுக்க வேண்டும். இவ்வாறு, ரவி கூறியுள்ளார்.


