Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கார் டிரைவர் மர்ம சாவு : தாய் போலீசில் புகார்

கார் டிரைவர் மர்ம சாவு : தாய் போலீசில் புகார்

கார் டிரைவர் மர்ம சாவு : தாய் போலீசில் புகார்

கார் டிரைவர் மர்ம சாவு : தாய் போலீசில் புகார்

ADDED : ஜூலை 21, 2011 05:13 AM


Google News

பெங்களூரு : மைசூரில், தமிழ் சினிமா படக்குழுவினருக்கு கார் டிரைவராக இருந்த ஒருவர், மர்மமான முறையில் இறந்தார்.

நடிகர் சிலம்பரசன் நடித்து வரும், 'ஒஸ்தி' என்ற தமிழ் சினிமா சூட்டிங், கடந்த இரண்டு மாதமாக மைசூரில் நடந்து வருகிறது. இந்த படக்குழுவினருக்கு, பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் வசித்த, ஹரீஸ்குமார் சிங்,28, என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவர், மைசூரு கிருஷ்ணா காண்டினென்டல் ஹோட்டலில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, ஹோட்டல் அறையில் படுக்கச் சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் ஹரீஸ்குமார் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது, அறை உள்ளே ஹரீஸ்குமார் சிங் இறந்து கிடந்துள்ளார். போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வந்து அறைக் கதவை உடைத்து, ஹரீஸ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

ஹரீஸ்குமார் சிங்குடன் நெருக்கமாக பழகியவர்கள் சிலர் கூறுகையில், ''ஹரீஸ்குமார் சிங்கிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். ஒருவர் அவரை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். அதனால், மனமுடைந்த நிலையில் சில நாட்கள் இருந்தார்,'' எனக் கூறினர்.

ஹரீஸ்குமாரின் தாய் அம்புஜம்மா, ''என் மகன் சாவில் மர்மம் இருக்கிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்,'' என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us