முதல்வர் பல்கலை., வேந்தராக முடியாது: மசோதாவை திருப்பி அனுப்பிய ஜனாதிபதி
முதல்வர் பல்கலை., வேந்தராக முடியாது: மசோதாவை திருப்பி அனுப்பிய ஜனாதிபதி
முதல்வர் பல்கலை., வேந்தராக முடியாது: மசோதாவை திருப்பி அனுப்பிய ஜனாதிபதி
UPDATED : ஜூலை 18, 2024 10:21 AM
ADDED : ஜூலை 17, 2024 11:39 PM

அமிர்தசரஸ்: பஞ்சாபில் பல்கலை. வேந்தர்களாக மாநில முதலமைச்சர் பதவி வகிக்க வகை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த்மான்சிங் உள்ளார். இம்மாநில கவர்னராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இருவருக்குமிடையே மோதல் போக்கு தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைகழகங்களில் முதலமைச்சரே வேந்தர்களாக பதவி வகிக்கும் மசோதா 2023 மற்றும் குருத்துவரா தொடர்பான மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஜனாதிபதியால் மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மாநில முதலமைச்சர் பல்கலைகளின் வேந்தர்களாக இருக்க முடியாது, அதற்கான வழிமுறை இல்லை என மசோதா ஜனாதிபதியால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.