ADDED : ஜூலை 17, 2024 11:34 PM

ஜம்முவில் கடந்த ஓராண்டாக பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளை தடுப்பது, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் யூனியன் பிரதேச நிர்வாகம் தோற்றுப் போயுள்ளது. பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி, தேர்தலுக்கு முன் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது!
பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ளவர்களின் மாதாந்திர நுகர்வு வெறும் 1,373 ரூபாயாக உள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் பணக்காரர்களின் மாதாந்திர நுகர்வு 20,824 ரூபாயாக உள்ளது. இதற்கு, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளே காரணம்.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்
தனியாரில் இட ஒதுக்கீடு!
விரைவில் அரசு நிறுவனங்களும் தனியார் மயமாகலாம். எனவே, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். அதே சமயம் நாங்கள் பொதுப் பிரிவினரை எதிர்க்கவில்லை.
ராம்தாஸ் அத்வாலே, மத்திய இணை அமைச்சர், இந்திய குடியரசு கட்சி