/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வட்டார விளையாட்டு போட்டி சி.எம்.எஸ்., பள்ளி முதலிடம்வட்டார விளையாட்டு போட்டி சி.எம்.எஸ்., பள்ளி முதலிடம்
வட்டார விளையாட்டு போட்டி சி.எம்.எஸ்., பள்ளி முதலிடம்
வட்டார விளையாட்டு போட்டி சி.எம்.எஸ்., பள்ளி முதலிடம்
வட்டார விளையாட்டு போட்டி சி.எம்.எஸ்., பள்ளி முதலிடம்
ADDED : டிச 28, 2010 11:21 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார விளையாட்டு போட்டிகளில் சி.எம்.எஸ்., மேல்நிலை பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
இப்பள்ளி மாணவர் மாரிச்செல்வம் 14 வயதுக்கு கீழ்பட்ட மாணவர் பிரிவிலும், அன்பழகன் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர். ஓட்டப்போட்டியில் 100, 200 மீ., பிரிவில் முறையே சீனிவாசன், ஆனந்த மூர்த்தி, 400 மீ., பிரிவில் உதயகுமார், 800, 1,500 மீ., பிரிவில் ராமச்சந்திரன், ரகு ஆகியோர் முதலிடம் பெற்றனர். 400 மீ., தொடர் ஓட்டபோட்டி, களப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி வட்டார அளவில் முதலிடம் பிடித்தது. வென்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர் மணி, ஆசிரியர்கள் டேவிட் ஞானசேகரன், ராபின் ஞான தாஸ் ஆகியோரை தாளாளர் எட்வின் கனகராஜ், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் சாமுவேல் பாராட்டினர்.