/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/காக்கும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்காக்கும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
காக்கும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
காக்கும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
காக்கும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
செப் 08, 2024

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொண்டாடும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. இதனையொட்டி மக்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்து கொழுக்கட்டை, அவல், பொரி முதல் விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாட்டில் நாட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ காக்கும் பிள்ளையார் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விநாயகப் பெருமான், சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்