/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/திருமலை திருப்பதியில் கானஸ்ம்ருதி மண்டலி நாம சங்கீர்த்தனம்திருமலை திருப்பதியில் கானஸ்ம்ருதி மண்டலி நாம சங்கீர்த்தனம்
திருமலை திருப்பதியில் கானஸ்ம்ருதி மண்டலி நாம சங்கீர்த்தனம்
திருமலை திருப்பதியில் கானஸ்ம்ருதி மண்டலி நாம சங்கீர்த்தனம்
திருமலை திருப்பதியில் கானஸ்ம்ருதி மண்டலி நாம சங்கீர்த்தனம்

ஆகஸ்ட் 22, சென்னையைச் சேர்ந்த கானஸ்ம்ருதி பஜனை மண்டலிக்கு தெய்வீக மேடையில் நாமசங்கீர்த்தனம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. சனாதன தர்மம் மற்றும் மூன்று நம்பிக்கை முறைகளை (அத்வைதம் - ஸ்ரீ ஆதி சங்கரர், த்வைதம் - ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் மற்றும் விசிஷ்டா த்வைதம் - ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்) பரப்புவதில் முக்கிய பங்காற்றிய மூன்று குருமார்களை உள்ளடக்கிய நிகழ்ச்சியை கானஸ்ம்ருதி பஜன் மண்டலி தொடங்கியது.
ஆகஸ்ட் 21, ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகளின் ஆராதனை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், வெங்கட்ரமணர், லக்ஷ்மி தேவி ஆகியோரின் பாடல்களையும் பாடினர். ஆஞ்சநேயர் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. எஸ்.வி.பி.சி.யால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் இசை ஆவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்