Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் அனுஷம் பூஜை

அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் அனுஷம் பூஜை

அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் அனுஷம் பூஜை

அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் அனுஷம் பூஜை

செப் 15, 2024


Latest Tamil News
உம்மாச்சி தாத்தா என்று செல்லமாக குழந்தைகளாலும் மஹா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 7-வது அனுஷம் பூஜை செப்டம்பர் 9, 2024 அன்று அயோத்தியில் உள்ள ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் . மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை வித்யார்த்திகள் பலர் இதில் திரளாக பங்கேற்று ஸ்ரீஸுக்தம், புருஷஸூக்தம், ருத்ரம், நமகம், சமகம், ஸ்ரீ ராம புஜங்க பிரயாத ஸ்தோத்திரம் மற்றும் தோடகாஷ்டகம் பாராயணம் செய்தனர்.


இதைத் தொடர்ந்து ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் திருவுருவப் படத்தை பாடசாலை வித்யார்த்திகள் பக்தியுடன் ஏந்தியவாறு மடத்தின் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.


ஓரிக்கை மணி மண்டபத்தில் தற்போது நடைபெற்று வரும் சாதுர்மாஸ்ய பூஜையின் போது காஞ்சி மடாதிபதி பூஜ்யஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அயோத்தி ஸ்ரீராம் மந்திர் கர்ப கிரஹத்திலிருந்து 20 ஆகஸ்ட் அன்று பிரசாதம் வழங்கப்பட்டது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us