Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/சென்னையில் 27வது லட்சுமி ந்ருசிம்ம ஜெயந்தி உற்சவம்

சென்னையில் 27வது லட்சுமி ந்ருசிம்ம ஜெயந்தி உற்சவம்

சென்னையில் 27வது லட்சுமி ந்ருசிம்ம ஜெயந்தி உற்சவம்

சென்னையில் 27வது லட்சுமி ந்ருசிம்ம ஜெயந்தி உற்சவம்

மே 17, 2023


Latest Tamil News
சென்னை அடையாறில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில் நடைபெற்ற 27வது லக்ஷ்மி ந்ருசிம்ம ஜெயந்தி உற்சவம் விசாகீர்தலி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 1969 ஆம் ஆண்டு ஸ்ரீ வி பி சாஸ்திரிகளால் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை, தற்போது அதன் நிர்வாக அறங்காவலரான சங்கர் பாகவதரின் திறமையான தலைமையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. ரகுராமன், ராமசேஷன், வி எம் சுந்தரம், கணேசன் சுந்தரம் அறங்காவலர்களாக உள்ளனர். பம்பாய் சத்யா, திருவிசநல்லூர் ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை விக்னேஷ், புதுக்கோட்டை நரசிம்மன் ஆகிய முக்கிய பாகவதர்கள் இந்த ஆண்டு நிகழ்வில் பங்கறே்றனர். தில்லி சங்கர் பாகவதரின் சம்பிரதாய சீதா கல்யாணம் மற்றும் லக்ஷ்மி ந்ருசிம்ம கல்யாணத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அண்ணாமலையார் அறப்பணிக்குழு ராமச்சந்திரனை தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த கோயில்களுக்கு புத்துயிர் அளிப்பதில் அவர் ஆற்றிய அளப்பரிய சேவையை அங்கீகரித்து, அறக்கட்டளை கவுரவித்தது. அடையாறு பிரக்ருதி வும்மிடி பங்காரு ஸ்டோரின் எம்.டி., பிரசாந்த் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். உற்சவத்தில் டிடி பொதிகை இயக்குனர் டாக்டர் என் ரகு, , ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ், தஞ்சாவூர் தியாகராஜ பாகவதர், கடலூர் கோபி பாகவதர் மற்றும் மகாதேவன் பாகவதர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.- நமது செய்தியாளர் எஸ் வெங்கடேஷ்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us