Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/டிவைன் பள்ளியின் கலாச்சார விழா

டிவைன் பள்ளியின் கலாச்சார விழா

டிவைன் பள்ளியின் கலாச்சார விழா

டிவைன் பள்ளியின் கலாச்சார விழா

ஏப் 09, 2024


Latest Tamil News
ஈரோடு, க ருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள டிவைன் மழலைய ர் மற்றும் ஆரம்பப் பள்ளியில் கலாச்சார மற்றும் ப ரிசளிப்பு விழா உலக அமை தி தூதர் குருமகான் அருளாசியோடு நடைபெற்றது.

முதல் நாள் கோவை, அரசு கலை மற்றும் கலாச்சாரத் துறை கண்காணிப்பாளர் காளியம்மாள் தலைமையேற்று சிலம்பாட்டம், பறைமுழக்கல் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திய மழலைகளுக்கு பரிசுகள் அளித்தார்.


இரண்டாம் நாள் நிழ்ச்சிக்கு ஈரோடு, ரோட்ட ரி சங்க உறுப்பினர் மேகலா செங்குட்டுவன் தலைமையேற்றார். உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர் சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினா ர்.


நிகழ்ச்சியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் இயற்கை வளம் காத்தல் காத்தல், உழவின் முக்கியத்துவம், மனித நேயம், பூமியைக் காத்தல் போன்ற பொருளடங்கிய கலை நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தினர் . இதில் கண்களை கட்டிக் கொ ண்டு சிலம்பம் ஆட்டம் மற்றும் குழுக்களாக யோகாசன பயிற்சிகள் செய்தல் அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றது.


கலைநிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளிலும் பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்புரை நல்கினார். பள்ளியின் துணை முதல்வர் தேவகி நன்றி உரையாற்றினார். விழாவில் பள்ளி தாளாளர் இராஜகணபதி, பள்ளி மேலாளர்சுப்பிரமணியன் மற்றும் உலக சமாதான ஆலய ஞானாசிரியரியர்கள் கலந்து கொண்டனர்.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us