Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

மே 21, 2024


Latest Tamil News
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பணிபுரியும் கணினி மென்பொறியாளர் பெருமாள், தனது தந்தையின் பெயரால் நிறுவியுள்ள அண்ணாமலை அறக்கட்டளையும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறையும் ஐந்தாண்டுகள் செல்லத்தக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். தூய நெஞ்சக் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இரு நிறுவனங்களும் ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டன.

தமிழில் உள்ள அறிவியல் சிந்தனைகளைத் தொகுப்பது, ஆய்வு மேற்கொள்ளுவது, மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சிகளையும் கணினி சார்ந்த திறன் பயிற்சிகளையும் வழங்குவது இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளது.


அண்ணாமலை அறக்கட்டளையின் நிறுவனர் பெருமாள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் செய்யப்போகும் பணிகள் குறித்துத் தெரிவித்தார்: 'பல ஆயிரக்கணக்கான ஆண்டுப் பழமையுடையது தமிழரின் இலக்கியங்கள். அவற்றில் தமிழரின் அறிவியல் கருத்துகள் தெளிவாகப் பதிவு பெற்றுள்ளன. கால மாற்றத்தோடு தமிழர்களின் சிந்தனை மாற்றமும் வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால், அண்மைக் காலங்களில் தமிழுக்கும் அறிவியல் சிந்தனைகளுக்குமான தொடர்பு திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. பல சிந்தனைகள் மறக்கடிக்கப்படுகின்றன. அவற்றை மீண்டும் எடுத்துப் பேச வேண்டிய, விவாதிக்க வேண்டிய, இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இளைய தலைமுறையினருக்குத் தமிழ்சார்ந்த அறிவியல் சிந்தனைகள் கொண்டு சேர்க்கப்படும். உலகளாவிய அளவில் அறிவியல் சிந்தனையாளர்களோடு இணைந்து, தமிழை வளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றார்.


தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் தா.மரிய அந்தோனிராஜ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு ஒப்படைத்தார். உடன் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கி.பார்த்திபராஜா, பரிதி பதிப்பகத்தின் உரிமையாளர் ப.இளம்பரிதி மற்றும் சதிஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us