/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/மகரிஷி பரஞ்ஜோதியார் அன்னையர் தின வாழ்த்துமகரிஷி பரஞ்ஜோதியார் அன்னையர் தின வாழ்த்து
மகரிஷி பரஞ்ஜோதியார் அன்னையர் தின வாழ்த்து
மகரிஷி பரஞ்ஜோதியார் அன்னையர் தின வாழ்த்து
மகரிஷி பரஞ்ஜோதியார் அன்னையர் தின வாழ்த்து

'அன்னையே குடும்பத்தின் ஆதாரமாக விளங்குகிறார். இந்தப் பிரபஞ்சமும் ஒரு தாய்தான். பிரபஞ்சத்திலிருந்த கருவறையிலிருந்து பிரபஞ்ச கருவில் தோன்றியதே இந்த உலகம். ஆகவே உலக மாந்தர்கள் அனைவரும் பிரபஞ்சத் தாய் பெற்றெடுத்த குழந்தைகளே. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.ஒரு தேசத்தின் மக்களை ஒருங்கிணைத்து அந்த தேசத்தவர் என்பதைப் போல இந்த பூ மண்டலத்திலிருந்து தோன்றிய மனித குலம் மட்டுமல்ல இந்தக் கருவில் தோன்றிய அனைத்து உயிர்களும் – நீர் வாழ்வன – ஊர்வன – தாவரங்கள் – பரப்பன – நடப்பன போன்ற எல்லா ஜீவராசிகளும் ஒன்று.
^இந்த உலகத்தையும் கடந்து இந்த பிரபஞ்சத்திற்கே கருவாய் உள்ள பிரபஞ்ச சக்தியே பிரம்ம சக்தி. அதுவே பரம சக்தி. அந்த சக்தியிலிருந்து தோன்றியதுதான் இந்தப் பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த அந்த அன்னை பிரபஞ்சமாகவே – இன்று சூரியனாக – சந்திரனாக – கிரகங்களாக – நட்சத்திரங்களாக – பூ மண்டலமாக விரிந்திரிக்க காண்கிறோம். காணும் பொருளெல்லாம் அது. காண்பதெல்லாம் அன்னையினுடைய வெளிப்பாடு.
'இதுதான் உலக சமாதான ஆலயத்தினுடைய தத்துவம். கடவுளைத் தவிர்த்து வேறு எதுவுமில்லை. வேறொரு பொருள் ஒன்று இருந்து அதை எடுத்து எல்லாவற்றையும் படைத்தார் என்பது இல்லை. எல்லாமாகப் பரிணமித்திருப்பதே – விரிந்திருப்பதே கடவுள். அந்தக் கடவுளே அன்னை. ஆக ஒரே கடவுள் என்ற ஒரே அன்னையிலிருந்து தோன்றியவர்களே நாம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அந்த அன்னையினுடைய வெளிப்பாடே. அன்னை என்ற கருவிலிருந்து தோன்றியவையே அனைத்தும்.
'ஆகவே பிரபஞ்ச அன்னையாய் இந்த பூமி அன்னை பூமியாய் ஒவவொரு இல்லத்திலும் – ஒவ்வொரு தேசமும் – நாடும் தாய் நாடாய் - ஒவ்வொரு இல்லத்திலும் தாயாக விளங்ககின்ற உலகளாவிய நாடுகளில் மனித குலம்மட்டுமல்ல – இந்த மண்ணுலகில் வாழ்கின்ற அத்தனை தாய் பேறு பெற்ற ஜீவராசிகள் தாய்மைப் பேறு பெறாமலிருக்கின்றபோது அதனுடைய குணங்கள் வேறாக உள்ளது.
'தாய்மைப் பேறு பெற்ற ஜீவராசிகளுக்கு ஒரு சிறப்பு அம்சம் அதாவது தன் கருவிலிருந்து தோன்றிய முட்டையிலிருந்து தோன்றியதாயினும் – வெப்பத்திலிருந்து தோன்றியதாயினும் கருப்பையிலிருந்து தோன்றியதாயினும் – நான்கு விதமானகருப்பை கருவில் உதித்த ஜீவராசிகள் மனிதன் கருப்பையிலிருந்து தேன்றியவன். ஆக அந்தக் கருவைத் தாங்கி நம்மை அறுவத்தில் அணுவைத் தரித்து தாயின் – தந்தையின் அணுவில் தரித்து தாயின் கருவறையில் துளைத்து அதில் உருவானது நாம். ஆகவே வித்து நன்றாக இருந்தாலும் அந்த வித்து கருவைத் தாங்கி உருவாக்குகின்றபோது அன்னையின் பொறுப்பு அன்னைக்கே உண்டு.
'ஒரு மனிதன் நல்லவனாவதும் தீயவனாவதும் தன்னுடைய தாய் கருவறையிலிருந்து அந்தக் கருவை வளர்ப்பதிலும் பிறந்த பிறகு ஐந்து வயது வரை அந்தக் குழந்தைக்குப் பாலூட்டும் போதும் சீராட்டும் போதும் – உறங்க வைக்கின்ற போதும் அந்த அன்னை அக்குழந்தைக்கு நற்சிந்தனைகளைப் போதித்து – நற்சொற்களைப் பேச வைத்து வளர்க்கிறாள். அதே போல நற்செயல்கள் ஒரு மனிதனை சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கின்ற ஒரு மிகப் பெரிய பொறுப்பை எடுத்துக் கொள்ளுகிறது.
'அந்த அன்னை பத்து மாதம் கருவில் சுமப்பது மட்டுமல்ல அந்தக் கரு தன் குடும்பத்திற்கும் – தன் தேசத்திற்கும் - இந்த உலகத்திற்கும் நல்ல மனிதனாக – உலகம் போற்றும் மாமனிதனாக உருவாக்ககின்ற அற்புதமான பணியைப் பொறுப்புணர்வோடு அன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆகவே அன்னை என்றாலே அன்பு. அன்புக்குப் பாத்திரமானவர். ஆகவே அன்னையே நீடூழி வாழ்க. தாய்மைப் பேறு பெற்றவர்களும் பெறாதவர்களும் தாங்கள் முதலிலே குடும்பம் நலம் பெற நீங்கள் நலம் பெற வேண்டும்.
:உங்களுடைய தியாகத்தால்தான் ஒரு குழந்தையை குடும்பத்திற்காக - சமுதாயத்திற்காக – ஏன் உலகத்திற்காகவே உருவாக்குகிறீர்கள். தம்முடைய நலம் – வளம் அனைத்தையும் தியாகம் செய்து குழந்தையை மிகப் பெரிய நிலைக்கு உயர்த்துகிறீர்கள். என் அன்புக்குரிய அன்னையரே நீவிர் நலமாய் – வளமாய் – மகிழ்வாய் – நிறைவாய் நீடூழி வாழப் பரிபூரண நல்லாசிகள். அன்னையர் தினத்தைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள அத்தனை அன்பர்களும் நீடூழி வாழ்க.
'இந்த அன்னையின் பூமியைக் காப்போம் இந்த உலகத்திலுள்ள அனைத்து அன்னையரையும் பாதுகாப்போம். அன்னையர் மகிழ்ந்தால் இந்த அகிலமே மகிழும். ஆடவர்களுடைய பொறுப்பு அன்னையரைக் காப்பது. குடும்பத்தின் ஆணி வேராகத் திகழ்வது அம்மா. ஆகவே அம்மா நீ நீடூழி வாழ்க .உனது கடமைகள் நீடூழி வாழ்க. உமது முகம் இனிது. உமது சொல் இனிது. உமது இனிய சொற்களாலேயே சமுதாயம் நன்றாக உள்ளது தேசமே நன்றாக இருக்கிறது.
'இந்த வையகமே உனது அன்பால் சிறந்துள்ளது நீயே கலை மகளாய் இருக்கிறாய். இவ்வுலகைக் காக்கும் மகா லட்சுமியாய் விளங்குகிறாய்..இந்த உலகிற்கு நலமளிக்கும் அற்புதமான துர்க்கா தேவியும் நீயே. அன்னையே அனைத்திற்கும் மூல காரணம். அன்னையர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து நல்லுள்ளங்களும் – அமைப்புக்களும் – நாட்டினரும் நீடூழி வாழப் பரிபூரண நல்லாசிகள்.
'ஒரே ஒரு நிமிடம் உலக அமைதிக்காக தான் அமைதி நிலையை உணர்ந்து தன் அமைதி மூலம் குடும்ப அமைதி – தன் மூலம் தேச அமைதி – உலக அமைதி. தனி மனித அமைதியே உலக அமைதி என்ற நிலையிலே உலகத்தை வாழ்த்து வோம். பிரபஞ்சத் தாயை வாழ்த்துவோம். பிரபஞ்ச தாயாய் விளங்ககின்ற பிரபஞ்ச சக்தியை வாழ்த்துவோம்.
அன்னை பூமி நீடூழி வாழ்க – பிரபஞ்சம் நீடூழி வாழ்க
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்