/பிற மாநில தமிழர்/புதுடில்லி/துவாரகா ஸ்ரீராம் மந்திரில் இசைக் கச்சேரிதுவாரகா ஸ்ரீராம் மந்திரில் இசைக் கச்சேரி
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் இசைக் கச்சேரி
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் இசைக் கச்சேரி
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் இசைக் கச்சேரி
ஆக 26, 2024

புதுடில்லி துவாரகா 7-வது செக்டாரில் அமைந்துள்ள ஸ்ரீராம் மந்திரில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு நடந்த ஹரிணி முரளி மற்றும் அனகா மணிகண்டனின் கர்நாடக இசைக் கச்சேரி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. உமா அருண் வயலினும், ஜி. சுவாமிநாதன் மிருதங்கமும் வாசித்தனர்.
நிகழ்ச்சியில் மூத்த இசைக் கலைஞர் பேராசிரியர் டிவி. மணிகண்டன், தில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே.பெருமாள், வேத வித்தகர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களை வாழ்த்தினர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் முரளி, ராம்குமார், கணேசன், ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.
சகஸ்ரநாம அர்ச்சனை
செப்டம்பர் 7-ல் கொண்டாடப்பட உள்ள பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு , சகஸ்ரநாம அர்ச்சனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, 7-ம் தேதி வரை தினமும் காலை சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்படுகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்