/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில் அகண்ட பாராயணம்ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில் அகண்ட பாராயணம்
ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில் அகண்ட பாராயணம்
ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில் அகண்ட பாராயணம்
ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில் அகண்ட பாராயணம்
ஆக 25, 2024

புதுடில்லி கேசவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில், உலக நலன் கருதியும், தலைநகர் புதுடில்லியில் நிலவும் சூழ்நிலையை போக்கவும், சமுதாயத்தில் மனித விழுமியங்களைப் பாதுகாக்கவும், உலகளாவிய அமைதியை நிலைநாட்டவும், காலை கணபதி பூஜை, அதைத் தொடர்ந்து, ருத்ராபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து காலையில் தொடங்கி மாலை வரை, 27 முறை இடைவேளையின்றி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. ஓவ்வொரு ஆவர்த்திக்கும், ஓவ்வொரு நட்சத்திரத்தின் அதி தேவதைகளுக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. ரோகினியைச் சார்ந்த ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் அன்பர்கள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை ஆஸ்திக சமாஜம் செய்திருந்தது.
அர்ச்சனை செய்யப்பட்டு, ஶ்ரீ கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவில் மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்