/பிற மாநில தமிழர்/புதுடில்லி/துவாரகா ஸ்ரீராம் மந்திரில் சன்டி ஹோமம்துவாரகா ஸ்ரீராம் மந்திரில் சன்டி ஹோமம்
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் சன்டி ஹோமம்
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் சன்டி ஹோமம்
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் சன்டி ஹோமம்
அக் 12, 2024

புது தில்லி : விஜயதசமியை முன்னிட்டு துவாரகாவில் உள்ள ஸ்ரீராம் மந்திரில், உலக நன்மை வேண்டி, காலை சன்டி ஹோமம், ஸ்ரீ சரவண சாஸ்திரிகள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்னை ஸ்ரீ காமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் துவாரகா சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. பக்தர்கள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். மதியம் தெய்வீக தேவி பக்தர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
அதைத் தொடர்ந்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. பக்தர்கள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். மதியம் தெய்வீக தேவி பக்தர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.
புரட்டாசியை ஒட்டி, மாலை விஸ்வநாத பாகவதர், வி. எஸ். எஸ். பஜன் மண்டலி, நொய்டா குழுவினரின் பஜனை நடைபெற்றது. விக்னேஷ் ஜெயராமன் மிருதங்கம் மற்றும் அனந்தகிருஷ்ணன் டோல்கியும் வாசித்தனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்